பிறந்து 24 மணி நேரத்திற்குள் சடலமாக தண்ணீரில் மிதந்த ஆண் குழந்தை; கண்காணிப்பு காமிராவில் சிக்கும் பெண்…

23 November 2020, 10:21 pm
Quick Share

கன்னியாகுமரி: இறச்சகுளம் பகுதியில் நேற்று முன்தினம் ஆண் குழந்தையின் சடலமொன்று சாக்கடை ஒடையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீசார் சோதனை செய்ததில் 45 வயது மதிக்கத்தக்க பண் ஒருவர் கையில் பையுடன் வந்தது தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவில் உட்பட்ட இறச்சகுளம் பகுதியில் இருந்து தாழாக்குடி செல்லும் சாலையில் சாக்கடை ஓடையில் ஆண் குழந்தையின் சடலம் கிடப்பதாக நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது இறந்த நிலையில் ஆண் குழந்தை ஒன்று துணியில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது கண்டெடுக்கப்பட்டது. பிறந்து ஒரு நாளே ஆன அந்த குழந்தையை யாரோ புதர்களுக்கு இடையே போட்டுவிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. முறைதவறி பிறந்த இந்த குழந்தையை யாராவது கொலை செய்து போட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது குறித்து பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்தில் சோதனை செய்து குழந்தையின் தாய் யார்,குழந்தையின் கொலையின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் காட்சிகளை இன்று ஆய்வு செய்தனர். அப்போது கண்காணிப்பு கேமராவில் ஒரு சில பெண்களின் உருவங்கள் பதிவாகி இருந்தது. அதை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த பெண்ணின் புகைப்படத்தை காட்டி விசாரணை நடத்தப்படுகிறது.

விசாரணையில் அந்த பகுதியில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பையுடன் கால்வாய் கரையில் நடந்து செல்வது தெரிந்தது .அந்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது .அந்த 45 வயது பெண்ணின் மகளுக்கு வேறு ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு குழந்தை பிறந்து இருக்கலாம் என்றும் ,அந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் அவர் தண்ணீரில் வீசி சென்றாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் அந்த பகுதில் உள்ள ஆஸ்பத்திரிகளில் கடந்த இரண்டு நாட்களில் பிரசவத்திற்கு வந்தவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

Views: - 0

0

0