புதுச்சேரியில் பேக்கரியில் தகராறு: பிரபல ரவுடி மற்றும் அவரது கூட்டாளி கைது

Author: Udhayakumar Raman
20 September 2021, 7:29 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் பேக்கரி ஒன்றில் தகராறு செய்து அதன் உரிமையாளரிடம் மாமூல் கேட்ட பிரபல ரவுடி மற்றும் அவரது கூட்டாளியை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி தவளகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முக சுந்தரம் இவர் மகாத்மா காந்தி வீதியில் பேக்கரி ஒன்று நடத்தி வருகிறார், இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே முத்தியால்பேட்டை சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திக் @ எலி கார்த்தி மாமூல் தர வேண்டும் என மிரட்டி வந்த நிலையில் நேற்று மாலை உரிமையாளர் கடையில் இல்லாத போது தனது கூட்டாளி வானரபேட்டை பகுதியை சேர்ந்த மதி உடன் வந்த அவர் தனக்கு மாமூல் தரவில்லை என்றால் கடையை அடித்து நொருக்கி விடுவதாக கூறி கடையில் வேலை செய்து வரும் சிவா என்ற ஊழியரின் சட்டையை பிடித்து மிரட்டி உள்ளார்,

இது அனைத்தும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியது, இதனை தொடர்ந்து கடையின் உரிமையாளர் சண்முகசுந்தரம் பெரியக்கடை காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளுடன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் எலி கார்ரத்தி மற்றும் அவரது கூட்டாளி மீது வழக்கு பதிந்து, இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் ரவுடி எலி கார்த்திக் மீது 4 கொலை வழக்கு, நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கு உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது..

Views: - 228

0

0