பெங்களுரா மாங்காய் விலை வீழ்ச்சி: போட்ட முதலே கிடைக்கவில்லை என மா விவசாயிகள் வேதனை

18 May 2021, 7:29 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெங்களுரா மாங்காய் விலை வீழ்ச்சியால் போட்ட முதலே கிடைக்கவில்லை என மா விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிக அதிக அளவில் மா சாகுபடி செய்யப்பட்டு உள்ளது, இதில் அத்திகுண்டா, வேப்பனஹள்ளி,கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, மத்தூர், போச்சம்பள்ளி, பலாகுறி என பல்வேறு இடங்களில் சுமார் 40 ஆயிரம் ஹெக்டர் நிலப்பரப்பில் மா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது, இதில் பெங்களூரா, மல்கோவா, நீலம், மல்லிகா, பங்கனபள்ளி, காதர், என பலவகையான மா சாகுபடி செய்யப்பட்டு ஆண்டுதோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சரியான உரிய நேரத்தில் மழை பெய்யாததால் விவசாாயிகள் டிரக்டர்கள் மூலம் தண்ணீரை விலைக் கொடுத்து வாங்கி மாமரங்களுக்கு ஊற்றியதின் பயனாக ஓரளவு மாங்காய் அறுவடைக்கு வந்து உள்ளது, ஆனால் விவசாயிகள் பல லட்சம் வரை செலவு செய்யப்பட்ட மாங்காய்க்கு உரிய விலை கிடைக்காததால் மா விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். இதுகுறித்து அத்திகுண்டாவை சேர்ந்த மா விவசாயி சையத் கூறுயில் என்பவர் 40 ஏக்கர் நிலம் குத்தகை எடுத்து அதில் பெங்களூரா, நீலம், செந்தூரா உள்ளிட்ட பல்வேறு வகையான மாங்காய்கள் விளைவிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் மாமாங்கள் பூ பூத்து காய் பிடிக்கும் பருவத்தில் போதிய மழை பெய்யாததால் தண்ணீர் விலைக்கு வாங்கி மாமரங்களுக்கு ஊற்றியதால் தற்போது பெங்களுரா என்ற ரகம் அறுவடைக்கு வந்து உள்ளது, ஆனால் கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் பெங்களுரா டன் ரூ.7000 மட்டுமே விலைபோவதால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது, இந்த விலை வீழ்ச்சியால் வங்கியில் வாங்கிய கடன், விட்டு அடமான பத்திரம் கூட இந்த ஆண்டும் திருப்பக்கூட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக விவசாயி வேதனையுடன் குறிப்பிட்டனர்.

Views: - 45

0

0