இந்தியன் வங்கியின் ஏ.டி.எம் கதவுகள் உடைப்பு

27 January 2021, 2:47 pm
Quick Share

சென்னை: வியாசர்பாடியில் இந்தியன் வங்கியின் ஏ.டி.எம் கதவுகள், கண்ணாடிகளை பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு மர்ம நபர்கள் உடைத்ததால் , பயங்கர சத்தத்துடன் அலாரம் தொடர்ந்து ஒலித்ததால் பரப்பு ஏற்பட்டது.

சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இதன் அருகிலேயே இந்த வங்கியின் ஏடி.எம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இன்று , ஏ.டி.எம் மில் இருந்த அலாரம் திடீரென பயங்கர சத்தத்துடன் ஒலி எழுப்பியது. இதனை பார்த்த அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து ஏடிஎம் இயந்திரத்தை பார்த்தனர். அப்போது , ஏ.டி.எம் மின் முன் பக்க கண்டாடிகள் உடைக்கப்படிருந்தன. உடனடியாக அப்பகுதி மக்கள் கொடுங்கயைூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கொடுங்கையூர் போலீசார் வங்கியின் துணை மேலாளர் ஷெரிப்பாவுக்கு தகவல் தெரிவித்தனர். துணை மேலாளர் சம்பவ இடத்திற்கு வந்து தொடர்ந்து ஒலித்து கொண்டிருந்த அலாரத்தை அணைத்தார். ஏ.டி.எம்மை உடைத்து மர்ம நபர்கள் பணம் எடுக்க வந்திருக்கலாம் எனவும் அவர்களின் திட்டம் பலிக்காததால் ஆத்திரத்தில் ஏ.டி.எம் கதவுகளை கற்களை கொண்டு அடித்து உதை்து விட்டு சென்றிருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

ஏ.டி.எம் மில் இருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்த பிறகும் , ஏடிஎம் மில் இருந்த பணத்தை சரிபார்த்த பின்பு தான் முழுமையான தகவல் தெரிவிக்கப்படும் எனவும் வங்கி அதிகாரிகள் மற்றும் போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.

Views: - 13

0

0