குடியிருப்புக்குள் உலா வரும் கரடி: பொது மக்கள் அச்சம்

Author: Udayaraman
24 July 2021, 7:31 pm
Quick Share

நீலகிரி: அளக்கரை பகுதியில் குடியிருப்பு வளாகத்தில் உலா வந்த கரடியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள அளக்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக, கரடிகள் நடமாட்டம் இருந்து வருகிறது. தேயிலை தோட்டங்களில் பதுங்கி இருக்கும் கரடிகள், அவ்வப்போது சாலையை கடந்து, சென்று வருகின்றன. இந்நிலையில் அப்பகுதியின் குடியிருப்பு பகுதியில் தடுப்பு சுவற்றின் மீது கரடி ஒன்று சர்வசாதாரணமாக உலா வரும் காட்சி தற்போது சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில் பலமுறை புகார் அளித்தும் வனத்துறையினர் கரடிகளை கூண்டு வைத்து பிடிப்பதற்கான நடவடிக்கை இதுவரை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

Views: - 55

0

0