மேல் நிலை நீர்தேக்க தொட்டிக்கான பூமி பூஜை: திமுக கிழக்கு மாவட்ட பொருப்பாளர் பங்கேற்பு

Author: kavin kumar
15 October 2021, 1:33 pm
Quick Share

தருமபுரி: அதியமான்கோட்டை ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியிலிருந்து 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மேல் நிலை நீர்தேக்க தொட்டிக்கான பூமி பூஜையை தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட பொருப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் பெ.சுப்ரமணி துவக்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை ஊராட்சியில் செந்தமிழ் நகர் பகுதியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தலித்சமூகத்தை சேர்ந்த இவர்கள் வசிக்கும் பகுதிக்கு கடந்த திமுக ஆட்சியில் பட்டா வழங்கபட்டது. ஆனால் இவர்களுக்கு போதிய குடிநீர் வசதி இல்லாததால் குடிதண்ணீருக்காக பல கிலோ மீட்டர் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வந்தனர். தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பலமுறை கடந்த அதிமுக ஆட்சியில் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கைம் எடுக்காத நிலையில் தற்போது திமுக ஆட்சி பொருப்பு ஏற்றவுடன் அப்பகுதியில் மேல் நிலை நீத்தேக்க தொட்டி அமைக்க மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஏ.எஸ்.மாது சண்முகம் நிதியில் இருந்து 6 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கபட்டது.

அதனையடுத்து இன்று அப்பகுதியில் மேல் நீர்தேக்க தொட்டிக்கான பூமி பூஜையை தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட பொருப்பாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் பெ.சுப்ரமணி துவக்கி வைத்து இனிப்புகள் வழங்கினார். தங்களது நீண்ட நாள் கோரிக்கையான குடிநீர் பிரச்சனையை ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே தீர்த்து வைத்த தமிழக முதல்வருக்கும் அப்பகுதி திமுகவினருக்கும் தங்களது மனமார்ந்த நன்றியை அப்பகுதி பொது மக்கள் தெரிவித்து கொண்டனர். இந்நிகழ்சியில் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய பொருப்பாளர் மின்னல் சக்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி மற்றும் ஊர் பொது மக்கள், கழக நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Views: - 203

0

0