புதிய சமுதாயக்கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடம் கட்டும் பணிக்கு பூமிபூஜை…

9 August 2020, 6:40 pm
Quick Share

தருமபுரி: பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடம் கட்டும் பணியை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேளாரஅள்ளி, எர்ரனஅள்ளி, நல்லூர், பி.செட்டிஅள்ளி ஊராட்சி ஆகிய இடங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடம் கட்டும் பணியை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவிக்கும் போது தமிழக அரசின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதித் திட்டத்தின் கீழ் 2019-2020 ஆம் ஆண்டில் பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலும் பெலமாரஅள்ளி ஊராட்சி, சாமனூர் ஊராட்சி, அத்திமுட்லு ஊராட்சி, கும்மளுர் ஆகிய 4 இடங்களிலும் புதிய சமுதாயக்கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடம் கட்டும் பணி விரைவில் துவங்கவுள்ளது.

பாலக்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் 8 இடங்களில் தலா ரூ.75 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.6.00 கோடி மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடம் கட்டப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள் பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மலர்விழி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 8

0

0