இராமர் கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை..!! இனிப்புகள் வழங்கி இந்து பாரத் சேனா அமைப்பினர் கொண்டாட்டம்..!!

5 August 2020, 5:57 pm
Quick Share

கோவை: அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெறுவதை கொண்டாடும் விதமாக , கோவையில் இந்து பாரத் சேனா அமைப்பினர் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு அனுமதி வழங்கியது இந்த நிலையில் கோவில் கட்டுவதற்காக, மத்திய அரசு, ‘ஸ்ரீ ராமஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில், அறக்கட்டளையை அமைத்தது.


இதனை தொடர்ந்து, அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதனை கொண்டாடும் வகையில் கோவையில் இந்து பாரத் சேனா அமைப்பின் சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

காந்திபுரம் விநாயகர் கோவில் பகுதியில் நடைபெற்ற இதில் பொதிமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் மகேஷ், மற்றும் மாநகரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Views: - 8

0

0