புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை

Author: Udayaraman
11 October 2020, 7:29 pm
Quick Share

தருமபுரி: மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.17.09 கோடி மதிப்பில் வாணியாறு அணை கால்வாய்களை புனரமைத்து நவீனப்படுத்துதல், புதிய தார்சாலை அமைக்கும் பணியினை உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தார்.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் இருமத்தூர் ஊராட்சி டொக்கம்பட்டியில் கைகாலான்குட்டை ரோடு முதல் கொல்லாபுரி மாரியம்மன்கோவில் வரை ரூ.46.69 இலட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி, மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் வாணியாறு துணை வடிநிலத்திலிருந்து வாணியாறு அணையின் கால்வாய்கள் மற்றும் வெங்கடசமுத்திரம், ஆலாபு அணைக்கட்டுகள் மற்றும் அதன் வழங்கு வாய்க்கால்கள், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பொதியம்பள்ளம் அணைக்கட்டு அதன் வழங்கு வாய்க்கால்,

அருர் ஒன்றியத்திலுள்ள எலுமிச்சைபெருமாள் கோயில் மற்றும் கணக்கண் அணைக்கட்டுகள் மற்றும் அதன் வழங்கு வாய்க்கால்கள் ஆகியவை ரூ.16.62 கோடி மதிப்பில் புனரமைத்து நவீனப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆக தருமபுரி மாவட்டத்தில் 17 கோடியே 09 லட்சம் மதிப்பில் கால்வாய் புரணைப்பு மற்றும் தார் சாலைகள் அமைக்கும் பணியிணை துவக்கி வைத்து இப்பணிகள் விரைவில் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

Views: - 34

0

0