விறுவிறுப்பான பிக்பாஸ் 8 டைட்டிலை தட்டித் தூக்கியது இவரா.. எவ்வளவு பரிசுத்தொகை தெரியுமா?

Author: Hariharasudhan
19 January 2025, 5:46 pm

பிக்பாஸ் 8 டைட்டிலை முத்துக்குமரன் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கான பரிசுத்தொகை மற்றும் ரன்னருக்கான பரிசுத்தொகை எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்.

சென்னை: பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சி பிக்பாஸ். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த நிகழ்ச்சி, தற்போது எட்டாவது சீசனில் உள்ளது. அதேநேரம், இந்த நிகழ்ச்சி, அதன் இறுதிக் கட்டத்தில் தற்போது இருக்கிறது. இந்த நிலையில், இன்று மாலை 6 மணியுடன் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது.

முன்னதாக, கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை, வழக்கம்போல் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவார் என எதிர்பார்த்த நேரத்தில், விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்தார். ஆனால், தொடக்கத்தில் இருந்தே மிகவும் நேர்த்தியாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி, போட்டியாளர்களை பேச விடுவது இல்லை எனவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

Biggboss 8 title winner

இந்த நிலையில், பிக்பாஸ் பைனலுக்கான ஷூட்டிங் இன்று முடிவடைந்துள்ளது. மேலும், அதில் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, பணப்பெட்டி டாஸ்கில் போட்டியாளர்கள் எடுத்த 10 லட்சம் ரொக்கம் போக, மீதம் இருந்த 40 லட்சம் பணம் மற்றும் கோப்பையை முத்துக்குமரன் தான் தட்டித்தூக்கி உள்ளார் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், ரன்னர் அப் ஆனவருக்கு 5 லட்சம் ரூபாய் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், ரவீந்தர் சந்திரசேகர், முத்துக்குமரன், ஜாக்லின், செளந்தர்யா நஞ்சுண்டான், அருண் பிரசாத், தர்ஷிகா, பவித்ரா ஜனனி, விஜே விஷால், ஆர்.ஜே.ஆனந்தி, சுனிதா, கானா ஜெப்ரி, ரஞ்சித், தர்ஷா குப்தா, சஞ்சனா, அக்‌ஷிதா, அர்னாவ், சத்யா, தீபக் ஆகியோர் பங்கேற்று இருந்தனர்.

  • Vijay Vs Sivakarthikeyan விஜய் சார் படத்தோட போட்டி போட எனக்கு தகுதி இல்ல : வீடியோ வெளியிட்ட சிவகார்த்திகேயன்?