உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 12 பேருக்கு வாந்தி, மயக்கம்

3 September 2020, 8:34 pm
Quick Share

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்ட 12 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் பாஜக நகர தலைவராக உள்ளவர் அதிசய குமார். இவர் காஞ்சிபுரத்தில் உள்ள உள்ள மூங்கில் மண்டபம் பகுதியில் தனியார் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த உணவகத்தில் இன்று பொதுமக்கள் சிலர் பிரியாணி வாங்கி சாப்பிட்டுள்ளனர். அந்த கடையில் பிரியாணி சாப்பிட்ட சிறுவர்கள் உள்பட 12 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஒரு சிலர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

காலாவதியான கோழி இறைச்சி பயன்படுத்தப்பட்டு உள்ளதா என்பது குறித்து உணவு தர நிர்ணய கட்டுப்பாட்டு துறையினரும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாட்டு அதிகாரி இடம் கேட்டதற்கு மேலதிகாரியின் உத்தரவாக காத்துக் கொண்டுள்ளோம், உணவகத்தை மூடி சீல் வைக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

Views: - 3

0

0