பாஜக மாவட்ட துணை தலைவர் கார் ஓட்டுநர் வடமாநில இளைஞர்களால் கடத்தல்

2 October 2020, 9:04 pm
Quick Share

விருதுநகா்: சாத்தூரில் பாஜக மாவட்ட துணை தலைவர் கார் ஓட்டுநர் கடத்தபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சாமியார் காலனியை சேர்ந்தவர் ஹென்றி (எ) ஹரிகரன் (56). இவர் அதே பகுதியை சேர்ந்த விருதுநகர் மாவட்ட துணைத்தலைவர் முருகேசன் என்பவரிடம் கடந்த ஒரு வருடமாக கார் ஒட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இன்று கோவில்பட்டியில் உள்ள இடம் விற்பது சம்பந்தமாக சென்று உள்ளார். இந்த நிலையில் அவருடைய செல்போனில் இருந்து தன்னுடைய மகளிடம் தன்னை அடையாளம் தெரியாத வடமாநில இளைஞர்கள் 3 பேர் கடத்தி விட்டதாக சொல்லி விட்டு செல்போனை ஆப் செய்துவிட்டார். இந்த நிலையில் அவரது மகள் சாத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் சாத்தூர் துணைகண்காணிப்பாளர் இராமகிருஷ்ணன் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து சாத்தூர் மற்றும் கோவில்பட்டியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் பாஜக மாவட்ட துணை தலைவரின் கார் ஓட்டுநரை பணத்திற்க்காக கடத்தபட்டார அல்லது முன்விரோதம் காரணமாக கடத்தபட்டார என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக மாவட்ட துணை தலைவர் கார் ஓட்டுநர் கடத்தபட்ட சம்பவம் சாத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 33

0

0