பாஜக சார்பில் கோவில் அர்ச்சகர்களுக்கு மளிகை தொகுப்புகள் வழங்கல்

28 September 2020, 3:24 pm
Quick Share

நீலகிரி: நீலகிரி மாவட்ட பாஜக சார்பில் கோவில் அர்ச்சகர்கள் சுமார் 50 க்கும் மேற்பட்டோருக்கு மளிகை தொகுப்புகள் மற்றும் காய்கறி தொகுப்புகள் வழங்கப்பட்டன.

நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 தேதி முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தலின்படி மூன்று மாதம் தொடர் ஊரடங்கு இருந்து வந்தது. தொடர்ந்து பல கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது ஏழாம் கட்ட ஊரடங்கில் பொதுமக்கள் தங்களின் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில் கொரோனா பொது முடக்கத்தால் ஆரம்ப கட்டத்தில் இருந்து நாடு முழுவதும் பாஜக சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளை பா.ஜ.க செய்து வருகிறது.

இதில் நீலகிரி மாவட்டத்தில் பாஜக சார்பில் மாவட்டம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு ஆரம்பத்தில் உணவு பொட்டலங்களும் அதைத்தொடர்ந்து மளிகை தொகுப்பும் காய்கறி தொகுப்பும் வழங்கி வந்தது பொதுமக்களுக்கு பெரும் உதவியாக இருந்து வந்தது. இதன் ஒரு பகுதியாக இன்று உதகை நகரில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட கோவில் அர்ச்சகர்களுக்கு 1500 மதிப்புள்ள மளிகை தொகுப்பும் காய்கறி தொகுப்பும் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நகர தலைவர் பிரவீன் குமார் மற்றும் பாஜக உறுப்பினர்கள் வழங்கினர்.

தொகுப்பு நிவாரண பொருட்களை பெற்றபின் கோவில் அர்ச்சகர்கள் கூறுகையில்,”கொரோனோ பெரும் முடக்கத்தால் பொதுமக்கள் பல இன்னலை சந்தித்து வந்த நிலையில், அவர்களுக்கு தேவையான உதவிகளை பாஜக செய்து வந்தது. இன்று தங்களுக்கு வழங்கிய இந்த நிவாரண தொகுப்புகள் மிகவும் தங்களுக்கு உதவியாக இருக்கும் என கூறினர். இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜ், நகர தலைவர் பிரவீன் குமார், நகர செயலாளர் சுரேஷ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.