தாய் மற்றும் மகளுக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ வழக்கில் வழக்கறிஞர் ஆந்திராவில் கைது

Author: kavin kumar
27 August 2021, 4:59 pm
Quick Share

சென்னை: கொடுங்கையூரை சேர்ந்த பெண் மற்றும் அவரது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கறிஞர் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கொடுங்கையூரை சேர்ந்த பெண் மற்றும் அவரது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு பெரம்பூர் மேற்கு மண்டல தலைவர் பார்த்தசாரதி மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் கடந்த மாதம் 16ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பார்த்த சாரதியை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி பார்த்தசாரதியை  நீக்குவதாக  அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் கொடுங்கையூர் போலீசார் மற்றும் எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் பார்த்தசாரதியை தேடி வந்தனர். அவரை பிடிப்பதற்கு புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தொடர்ந்து பார்த்தசாரதியின் செல்போன் அணைக்கப்பட்டு இருந்ததால் அவரை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில் கொடுங்கையூர் போலீசார் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வைத்து பார்த்தசரதியை கைது செய்தனர். அங்கு அவர் தனது நண்பர் வீட்டில் தங்கியிருந்தார் அவரை போலீஸ் தேடுவதை மறைத்து அங்கு தங்கி வந்துள்ளார். இந்நிலையில் பார்த்தசாரதி மீது உள்ள வழக்குகள் குறித்து கிராம மக்களிடம் தெரிவித்து கொடுங்கையூர் போலீசார் அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். தொடர்ந்து எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 165

0

0