பஞ்சாப்பில் பிரதமர் பாதுகாப்பு குறைபாடு விவகாரம் : பாஜகவினர் மனித சங்கிலி போராட்டம்

Author: kavin kumar
12 January 2022, 5:59 pm
Quick Share

திருச்சி: பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி பங்கேற்க சென்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் பாஜகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பஞ்சாப் சென்ற போது அங்கு விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் காரணமாக அவரது வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் பிரதமருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டதால், தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்காமல் பிரதமர் டெல்லி திரும்பினார். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருச்சியில் உள்ள தில்லைநகர் பகுதியில் பாஜகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதை கண்டித்தும் பஞ்சாப் காங்கிரஸ் அரசு மீது கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட பாஜகவினர் கைகளில் பதாகைகளையும், கொடியையும் ஏந்தியபடி கலந்து கொண்டு பஞ்சாப் மாநில அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

Views: - 190

0

0