செய்திதாள் முகவரை திருப்புலியால் சரமாறிய குத்திய பாஜக பிரமுகர் தலைமறைவு

Author: Udhayakumar Raman
7 September 2021, 5:32 pm
Quick Share

திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே செய்திதாள் முகவரை திருப்புலியால் சரமாறிய குத்தி விட்டு தலைமறைவான பாஜக பிரமுகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விருவீடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல முன்னணி செய்தித்தாள்களின் முகவராக இருந்து வருபவர் பன்னீர்செல்வம். இதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் கண்ணன் பாஜக பிரமுகர். இவரிடம் மாதச்சந்தா வாங்குவதற்கு பன்னீர் செல்வம் சென்றபோது கண்ணன் தர மறுத்து இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதில் கண்ணன் திருப்புலியால் சற்றும் எதிர்பாராத நேரத்தில் பன்னீர் செல்வத்தை தலை, கை, கால் உள்ளிட்ட நான்கு இடங்களில் குத்தி விட்டு தப்பி விட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் ரத்தம் கொட்டிய நிலையில் மயங்கி விழுந்த பன்னீர் செல்வத்தை திண்டுக்கல் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையில் புகாரின்பேரில் பெட்டிக்கடை நடத்தி வரும் பாஜ.க பிரமுகர் கண்ணனை தேடி வருகின்றனர்.

Views: - 112

0

0