தேர்தல் நடத்தை விதிகளை ரத்து செய்ய கோரி பாஜக எம்.எல்.ஏக்கள் மனு

Author: Udhayakumar Raman
20 October 2021, 6:53 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகளை ரத்து செய்ய கோரி பாஜக எம்.எல்.ஏக்கள் தேர்தல் துறை அதிகாரியை சந்தித்து மனு அளித்தனர்.

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து அதன்படி தேதிகளை அறிவித்திருந்தது. அதில் வார்டு வரையறை செய்வதில் குளறுபடி உள்ளதாக கூறி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்ததின் பேரில் தேர்தலை நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நாளை 21-ம் தேதிவரை புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை திரும்பப்பெற கோரி திமுக, காங்கிரஸ், என் ஆர் காங்கிரஸ், பாஜக, சுயேச்சை உள்ளிட்ட அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து ஏற்கனவே மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, அசோக்பாபு மற்றும் பாஜக நிர்வாகிகள் புதுச்சேரி தேர்தல் துறைக்கு வந்து தேர்தல் துறை அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்ட பின்னர், உள்ளாட்சி தேர்தலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்த பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அதுவரை தேர்தல் நடத்தை விதிகளை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் சாமிநாதன், தற்போது உள்ளாட்சி தேர்தலை நிறுத்திவைக்க நீதிமன்றம் வலியுறுத்தி உள்ள இந்த சூழலில் எந்தவித நலத்திட்டங்களையும் மக்களுக்கு செய்ய முடியவில்லை.

தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை திரும்பப்பெற தேர்தல் துறை அதிகாரியிடம் மனு அளித்துள்ளதாகவும், உடனடியாக சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டு வார்டு வரையறை குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும், உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவமிக்கை எடுக்க வேண்டும், தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலிநுறுத்தியதாக கூறினார். மேலும் அத்தனை குளறுபடிகளுக்கும் காரணம் புதுச்சேரி தேர்தல் துறை தான் என்றும் அவர்கள் மீது தவறு இருந்தால் உடனடியாக அவர்களை மாற்ற வேண்டும், தேர்தல் ஆணையர் தவறுகளை சரி செய்யவில்லை என்கால் தேர்தல் ஆணையர் மாற்ற கோரி தலைமை தேர்தல் ஆணையத்திடம் வலுயுறுத்தப்படும் என சாமிநாதன் தெரிவித்தார்.

Views: - 138

0

0