புதிய கல்விக் கொள்கையை புதுச்சேரியில் அமல் படுத்தக்கோரி பாஜகவினர் பேரணி

18 November 2020, 2:54 pm
Quick Share

புதுச்சேரி: புதிய கல்விக் கொள்கையை புதுச்சேரி மாநிலத்தில் அமல் படுத்தக்கோரி 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் கல்வித்துறையை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வி கொள்கையை புதுச்சேரி மாநிலத்தில் அமல் படுத்தக்கோரி பாஜக ஓபிசி அணி சார்பில் பேரணி நடைபெற்றது. சுதேசி பஞ்சாலையில் இருந்து சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மாநிலத் தலைவருமான சாமிநாதன் தலைமையில் தொடங்கிய பேரணியில் 300க்கும் மேற்பட்ட பாஜகவினர் கல்வித்துறையை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் புதிய கல்வி கொள்கையை அமல் படுத்தக்கோரி ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.