வேல் யாத்திரைக்கு அனுமதி கோரி பாஜக சாலைமறியல் : போக்குவரத்து பாதிப்பு!!

6 November 2020, 1:36 pm
Bjp Salaimariyal - Updatenews360
Quick Share

சென்னை : வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க கோரி பா.ஜ.க வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் , சென்னை கொளத்தூரில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.

தமிழகத்தில் பா.ஜ.க வினர் வேல் யாத்திரை நடத்த முடிவு செய்த போது , பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். வேல் யாத்திரை குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் யாத்திரைக்கு தடை விதிப்பதாக தமிழக அரசு நேற்று தெரிவித்தது.

ஆனால் தடையை மீறி பா.ஜ.க வினர் இன்று வேல் யாத்திரையை தொடங்க முயற்சித்த போது , மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் பா.ஜ.க வினரை போலீசார் தடுத்தி நிறுத்தினர்.

இதே போல் சென்னை கொளத்தூர் ரெட்டேரி சந்திப்பில் , பா.ஜ.க நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் வேல் யாத்திரைக்கு அனுமதி தரக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சுமார் 1 மணி நேரம் நீடித்த சாலை மறியலால் , போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.

Views: - 15

0

0