விவேகானந்தர் சிலைக்கு பா.ஜ.க மாநில தலைவர் முருகன் மாலை அணிவித்து மரியாதை

12 January 2021, 1:17 pm
Quick Share

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் சுவாமி விவேகானந்தர் சிலைக்கு பா.ஜ.க மாநில தலைவர் முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுவாமிவிவேகானந்தரின் 158 வது ஜெயந்திவிழாவினை முன்னிட்டு விவேகானந்தகேந்திராவில் உள்ள அவரதுசிலைக்கு பாஜக மாநில தலைவர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. வீரதுறவி சுவாமிவிவேகானந்தரின் 158 வது ஜெயந்திவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனைமுன்னிட்டு கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா கடற்கரையில் உள்ள அவரது முழுஉருவ வெண்கலசிலைக்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் ஆளுயரமாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் மாநில துணைதலைவர் நயினார் நாகேந்திரன்,மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் சதீஷ்ராஜா,மாவட்ட தலைவர் தர்மராஜ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Views: - 2

0

0