கலவரத்தை தூண்டும் சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

5 February 2021, 7:49 pm
Quick Share

புதுச்சேரி: மக்கள் மத்தியில் கலவரத்தை தூண்டும் சமூக வலைதளங்களில் பதிவுகள் பதிவிடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி பாஜக வழக்கறிஞர் அணி தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநில பாஜக நிர்வாகிகள் கூட்டம் ஏ.எப்.டி மைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் சாமிநாதன் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் கார்த்திகேயன், பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய தயார் எனவும் அதற்கு 5 கோடி வேண்டும் என சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர் மீது காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்ததற்கு காவல்துறைக்கு நன்றியை தெரிவித்து கொள்வதாகவும், தொடர்ந்து இது போன்று மேலும் பல பதிவுகள் சமூக வலைதளங்களில் உள்ளதால் அவற்றை உடனடியாக நீக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தொடர்ந்து இதுபோன்று அவதூறு பரப்புவர்களையும், கலவரத்தை தூண்டும் வகையில் பதிவுகள் பதிவிடுவோர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இல்லையெனில் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Views: - 0

0

0