கருப்புக் கொடியுடன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நிவாரணம் வழங்க கோரி காத்திருப்பு போராட்டம்

24 August 2020, 3:34 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புக் கொடியுடன் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் நிவாரணம் வழங்க கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கொரோன ஊரடங்கில் வருமானமின்றி பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ தமிழக அரசு மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கி உள்ளதாகவும், அதன் படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ தமிழக அரசு ரூ 10 லட்சம் நிதி ஒதுக்கி இருப்பதாகவும், அவற்றை பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு முறையாக வழங்கவில்லை எனக் கூறியும்,

கடந்த 5 மாதங்களாக பொது பேருந்து இல்லாததால் தங்களால் ஊதுபத்தி பேனா போன்ற வியாபாரம் செய்ய முடியவில்லை எனவும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்து தங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கிய நிதியை முறையாக வழங்காமல் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறி 20க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருப்பு கொடியுடன் மனு அளிக்க வந்தனார்.

அவர்களை காவலர்கள் தடுத்து ஒரு சிலரை மட்டும் மாவட்ட ஆட்சியரின் உதவியாளரை சந்தித்து மனு அளிக்க கூறினார்கள். அதற்கு மாற்று திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து மனு அளிப்போம் இல்லை எனில் மாவட்ட ஆட்சியர் வரும் வரை காத்திருப்போம் எனக்கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்பு நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு சிலர் மட்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

Views: - 0

0

0