சுற்றுலா பயணிகள் வருகை குறைவு…!கன்னியாகுமாரி விவேகானந்தர் சிலைக்கு படகு சேவை குறைப்பு

19 April 2021, 1:17 pm
Quick Share

கன்னியாகுமரி: சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் கன்னியாகுமரி விவேகானந்தர் சிலைக்கு படகு சேவை குறைக்கப்பட்டது.

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைந்து கன்னியாகுமரி வெறிச்சோடியது.சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவதுண்டு.கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஏற்பட்ட கொரோனா காரணமாக கன்னியாகுமரி சுற்றுலா தலம் முழுவதுமாக முடங்கியது. இந்நிலையில் தற்போது இரண்டாவது அலை வீசி வருவதால் கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகமிகக் குறைந்து காணப்படுகிறது. கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மட்டும் திருவள்ளுவர் சிலையை காண தினமும் 6000 முதல் 8000 வரை சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம்.

ஆனால் கொரோனோ அச்சம் காரணமாக கடந்த மூன்று தினங்களாக சுற்றுலா பயணிகள் வருகை மிக குறைந்துவிட்டது. தினமும் 750 முதல் 1000 பேர்கள் மட்டுமே படகில் பயணம் செய்கின்றனர். இதனால் விவேகானந்தர் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு மூன்று படகுகளுக்கு பதிலாக ஒரே ஒரு படகு மட்டும் நேற்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.திருவள்ளுவர் சிலைக்கு முற்றிலுமாக படகு சேவை ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் நாளை 20-ஆம் தேதி முதல் மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்படுத்த படுவதால் கன்னியாகுமரி முற்றிலுமாக களை இழந்து விடும்.

Views: - 13

0

0