விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல தயாராகும் படகுகள்

12 November 2020, 2:51 pm
Quick Share

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடலில் விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்ல படகுகள் தயாராகும் வகையில் கடலில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

கொரோனா பரவலையொட்டி சுற்றுலாதலங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் கடந்த 8 மாதங்களாக கன்னியாகுமரி சுற்றுலாதலம் வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும், விவேகானந்தர் மண்டபத்துக்கு படகுகளை இயக்க வேண்டும் என வியாபாரிகள் உள்ளிட்ட பலர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகர்கோவிலுக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கன்னியாகுமரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்ததோடு, விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இயக்கப்படும் எனவும் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து நேற்று பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான 5 படகுகளும் கடலில் வெள்ளோட்டம் விட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும் படகு துறையில் கியூ செட் பராமரிக்கப்பட்டது. முறையான வழிகாட்டு முறைகள் வெளியிட்ட பிறகு இன்றோ, நாளையோ படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Views: - 21

0

0