தஞ்சாவூர் கடத்த முயன்ற மது பாட்டில்கள் மற்றும் சொகுசு கார் பறிமுதல்

Author: Udhayakumar Raman
28 June 2021, 5:32 pm
Quick Share

நாகப்பட்டினம்: காரைக்காலில் இருந்து நாகை வழியாக தஞ்சாவூர் கடத்த முயன்ற ஒரு லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை தனிப்படை போலீசார் பத்து கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக நாகை திருவாரூர் தஞ்சாவூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளில் டாஸ்மாக் கடை திறப்பு குறித்து எந்தவித தளர்வும்அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து சட்டவிரோதமாக மதுபாட்டில்கள், கள்ளச் சாராயம் போன்றவை கடத்தி செல்வதை தடுக்க எஸ்.பி, ஜவகர் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று மது விலக்கு அமலாக்க பிரிவு தனிப்படை இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய டூனிக்ஸ் மேரி தலைமையிலான போலீசார் திட்டச்சேரி அருகே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது, அந்த வாகனம் நிற்காமல் சென்றது சந்தேகமடைந்த தனிப்படை போலீசார், இந்த வாகனத்தை 10 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று திருச்செங்காட்டாங்குடி என்ற இடத்தில் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மேலவாஞ்சூர் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி என்பவர் காரைக்காலில் இருந்து தஞ்சாவூருக்கு மதுபாட்டில்களை தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சேர்ந்த மணி என்பவருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. பின்னர் வாகனத்தை சோதனை செய்த போது அந்த சொகுசு காரில் 14 பாக்ஸ் மது பாட்டில்கள் நான்கு மூட்டை பாண்டி சாராயம் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக மது பாட்டில்களை மற்றும் கள்ளச்சாராயம் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர். சொகுசு கார் மற்றும் மது பாட்டில்கள் மதிப்பு சுமார் 4 லட்ச ரூபாய் இருக்கும் என மதுவிலக்கு போலீசார் தெரிவித்தனர்.

Views: - 207

0

0