விபரீதத்தில் முடிந்த விளையாட்டு: பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்

5 October 2020, 5:42 pm
Quick Share

மதுரை: வாடிப்பட்டி அருகே தொட்டியில் விளையாடிய சிறுவன் சேலையில் கழுத்து இறுகி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதிமக்ககளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ராயபுரம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (13) என்ற சிறுவன் தனது தாத்தாவுடன் வாடிப்பட்டி அருகே உள்ள குட்லாடம்பட்டியில் மாந்தோப்பில் குழந்தைக்கு அமைந்த தொட்டிலில் அமர்ந்து பிரகாஷ் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சேலையில் கழுத்து இறுகி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடனடியாக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து சென்று பரிசோதனை செய்ததில், சேலையால் கழுத்து இறுதி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து சிறுவன் உடலை பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுப்பி சிறுவன் இறப்பு குறித்து வாடிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 35

0

0