நண்பர்களுடன் விநாயகர் சிலையை ஏரியில் கரைக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு:இரண்டு மணி நேர தேடலுக்குப் பின் உடல் மீட்பு

By: Udayaraman
14 September 2021, 1:52 pm
Quick Share

சேலம்: சேலத்தில் நண்பர்களுடன் விநாயகர் சிலையை ஏரியில் கரைக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், இரண்டு மணி நேர தேடலுக்குப் பிறகு, சிறுவனின் உடலை மீட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் செவ்வாய்பேட்டை பஞ்சம்தாங்கி ஏரி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வீட்டில் ஒரு அடி விநாயகர் சிலையை வைத்து வழிபாடு நடத்தி வந்த நிலையில், இன்று சிலை கரைப்பதற்காக சுப்பிரமணியின் மகன்கள் தீபக்குமார், யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் இம்ரான்,கோபாலகிருஷ்ணன்
ஆகிய நான்கு பேரும் எருமாபாளையம் பகுதியில் உள்ள குருவிபனை ஏரியில் நேற்று சிலையைக் கரைத்துவிட்டு குளித்துக்கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது இம்ரான் நீருக்குள் மூழ்கி விளையாடி கொண்டிருந்தபோது நீண்டநேரம் ஆகியும் வராததால், அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு துறையினருக்கும், கிச்சிப்பாளையம் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் ஏரியில் மூழ்கிய சிறுவனை சுமார் இரண்டு மணி நேரமாக தேடிவந்த நிலையில் இறந்த நிலையில் இம்ரானின் உடல் மீட்கப்பட்டது. சிறுவனை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 89

0

0