மின்சாரம் தாக்கி மெக்கானிக் இளைஞர் உயிரிழப்பு

2 November 2020, 8:00 pm
Quick Share

அரியலூர்: அரியலூர் நகரில் மின்சாரம் தாக்கி மெக்கானிக் இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அரியலூர் நகரில் உள்ள தியாகி ஜெயராமன் தெருவில் விஜய் டூவீலர் மெக்கானிக் கடை உள்ளது. இக்கடையில் கடந்த ஒரு வருடமாக வாட்டர் சர்வீஸ் செய்து வருபவர் சிவா. இவர் இன்று வழக்கம்போல வேலைக்கு வந்து இருந்தார். அப்போது டூவீலர் ஒன்றுக்கு வாட்டர் சர்வீஸ் செய்ய மோட்டார் சுவிட்சை போட்ட போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் சிவாவின் உடலை அரசு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 10

0

0