தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழப்பு

18 May 2021, 10:37 pm
Quick Share

தருமபுரி: அரூர் அருகே வாணியாற்றில் உள்ள தேங்கியிருந்த தண்ணீரில் இரண்டு சிறுவர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கைலாயபுரம் கிராமத்தைச் சேர்ந்த  மூர்த்தி மகன் மாதேஷ் (13), காளியப்பன் மகன் வெற்றிவேல் (8) ஆகியோர் தனது தாத்தாவுடன் ஆடு மேய்க்க சென்றுள்ளனர். அப்போது சிறுவன் வெற்றிவேல்  இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாக தெரிவித்து வாணியாற்றில் உள்ள ஒரு குழத்தின் அருகே சென்றுள்ளாராம். அப்போது மாதேஷ் என்கிற சிறுவனும் சென்றுள்ளான். இயற்கை உபாதை கழித்துவிட்டு வருவதாக கூறிய சிறுவனை நீண்ட நேரமாகியும் காணவில்லை என தெரிவித்து, 

அவருடைய தாத்தா குழத்தின் அருகே சென்று பார்த்த பொழுது சிறுவனின் கால் சட்டை கரையின் அருகே இருந்துள்ளதை பார்த்ததை அடுத்து  அவருடைய தாத்தா மற்றும் அவரது உறவினர்கள் குளத்தில் இறங்கி தேடிப் பார்த்த பொழுது இரண்டு சிறுவர்களும் சடலமாக இருந்ததை கண்டுள்ளனர். சடலத்தை மீட்ட அவரது உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு சென்று பின்பு அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

Views: - 34

0

0