ஹவாலா பணம் கடத்தல் : 10 பேர் கைது!!

11 September 2020, 7:10 pm
Madurai Hawal Seized - updatenews360
Quick Share

மதுரை : மதுரையில் ரூ.52 லட்சம் வெளிநாட்டு பணம் கடத்தலில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை ரயில்நிலையத்தின் முன்பாக ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் மீனாட்சி பஜார் வாசலில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று இருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தியபோது முன்னுக்குபின் முரணாக பதில்அளித்த நிலையில் சந்தேகம் அடைந்த போலிசார் வாகனத்தை சோதனையிட்டனர்.

இதில் வாகனத்தினுள் இருந்த பையில் 52லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரேசில் நாட்டு பணத்தினை சட்டவிரோதமாக கொண்டுவந்தது கண்டுபிடித்தனர். இதனையடுத்து காலவதியான வெளிநாட்டு பணத்தை மாற்றி மோசடியில் ஈடுபட இருந்த உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த கருணாமூர்த்தி, ராஜேந்திரன், திருமாவளவன்,ராமர், உதயகுமார்,மகாலட்சுமி என்ற பெண் உள்ளிட்ட 10பேர் திலகர்திடல் காவல்துறையினர் கைது செய்தனர்.

ரூ.52லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இவர்கள் வெளிநாட்டு பணத்தினை சட்டவிரோதமாக மாற்றும் கும்பலாக செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. இவர்களிடம் தொடர்ந்து யார் யாருடன் தொடர்பில் இருந்தார்கள் என தொடர்புகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 0

0

0