ஆயில் மில்லின் பின்பக்க தகட்டை உடைத்து ரொக்கம் கொள்ளை

27 November 2020, 3:47 pm
Quick Share

தஞ்சை: தஞ்சையில் ஆயில் மில்லின் பின்பக்க தகட்டை உடைத்து 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை கொள்ளுப் பேட்டை தெருவில் பேச்சிமுத்து என்பவருக்கு சொந்தமான ஆயில் ஸ்டோரில் நேற்று இரவு புகுந்த கொள்ளையர்கள் கல்லாப் பெட்டியில் இருந்த 1 லட்சத்தி 34 ஆயிரம் பணம் மற்றும் சில்லரை நாணயங்களை திருடிச் சென்றனர் இன்று காலை கடையை திறந்தபோது கொள்ளை சம்பவம் தெரியவந்ததை அடுத்து உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் கடையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, காட்சிப் பதிவுகள் பதிவாக கூடிய ஹார்ட்டிஸ்க்கையும் கொள்ளையர்கள் திருடி சென்றது தெரியவந்தது இதையடுத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Views: - 16

0

0