வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை மற்றும் 35 ஆயிரம் பணம் கொள்ளை

8 September 2020, 5:29 pm
Quick Share

அரியலூர்; செந்துறை அருகே உள்ள வீட்டின் கதவை உடைத்து 10 சவரன் நகை மற்றும் 35 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலங்கைச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா. இவர் நேற்று இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு காற்றோட்டமாக மொட்டை மாடியில் படுத்து தூங்கி உள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இளையராஜாவின் தாயார் பூங்கோதை தகரப்பெட்டியில் வைத்திருந்த 10 சவரன் நகை மற்றும் 34 ஆயிரம் பணத்தை கொள்ளை அடித்து சென்றனர். இது குறித்து தகவலறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர். தடவியல் துறையினர் தடயங்களை சேகரிக்கும் பணியிலும் மேலும் மோப்பநாய் வரவழைக்கபட்டு திருடர்களை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Views: - 0

0

0