மளிகை கடை பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை: ரூ.3 ஆயிரம் ரொக்கம் அபேஸ்..!!

Author: Aarthi Sivakumar
23 September 2021, 7:41 pm
Quick Share

சென்னை: சங்கர் நகர் பகுதியில் மளிகை கடையை திறந்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய மளிகை பொருள் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் வ.உ.சி நகர் வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவில் சுமார் பத்து வருடங்களாக மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் சரவணன்(வயது-57) இவர் நேற்று வழக்கம் போல் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்றார்.

இன்று காலை கடையைத் திறப்பதற்காக கடைக்கு வந்த போது கடை திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார், கடைக்குள்ளே சென்று பார்த்தபோது கடையில் வைத்திருந்த 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் கடையில் இருந்த பிஸ்கட்,ஆயில் மளிகை பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

உடனே இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார், புகாரின் அடிப்படையில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அப்பகுதியில் பொருத்தப் பட்டிருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக சங்கர் நகர் பகுதியில் மளிகை கடையை குறிவைத்து திருடும் கொள்ளையனை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என கடை வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 63

0

0