தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 10 சவரன் தங்க நகை கொள்ளை…
16 August 2020, 3:49 pmபுதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியரின் வீட்டில் இருந்து 10 சவரன் தங்க நகை திருடிச் சென்ற மரம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட மாதா கோயில் விதியில் வசித்து வருபவர்கள் ரமேஷ்குமார், சுபாஷினி தம்பதியினர். இவர்கள் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகின்றார்கள். சுபாஷினி தன் உறவினருடன் அதேபகுதியில் உள்ள கடைக்கு வீட்டின் கதவை சரியாக பூட்டாமல் சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் வீட்டின் உள்ளே சென்று பீரோவை திறந்து அதில் இருந்த 10 சவரன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து சுபிக்ஷா அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.