நிவர் புயல் காரணமாக ஏரிகளில் உடைப்பு: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆய்வு

27 November 2020, 9:06 pm
Quick Share

வேலூர்: காட்பாடி அடுத்த பொன்னை பகுதியில் நிவர் புயல் காரணமாக ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆய்வு செய்து மீட்பு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பெண்ணை பகுதியில் நிவர் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக விடிய விடிய பெய்த கன மழையின் விளைவாக மாதண்டகுப்பம் கிராமத்தில் உள்ள மாதண்ட குப்பம் ஏரி உடைந்து மழை நீரானது. வயல்வெளிகளில் பாய்ந்தது தகவலறிந்த காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், திமுகவின் பொதுச் செயலாளருமான துரைமுருகன் உடைந்த மாதண்டகுப்பம் ஏரியை அதிகாரிகள் உடன் சென்று ஆய்வு செய்தார். மேலும் அதே பகுதியில் உள்ள எஸ். என் பாளையம், மேல்பாடி ஏரிகளையும் பார்வையிட்டு மீட்புப் பணிகளை விரைந்து சரிசெய்து கரைகளை பலப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Views: - 0

0

0