பூட்டிய வீட்டை உடைத்து பட்டப்பகலில் கொள்ளை: 8 சவரன் நகை மற்றும் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு

Author: kavin kumar
13 August 2021, 1:29 pm
Quick Share

காஞ்சிபுரம்: மணிமங்கலம் அருகே பூட்டிய வீட்டை உடைத்து பட்டப்பகலில் 8 சவரன் நகை மற்றும் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரத்தூர் அருகிலுள்ள நீலமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் கண்ணன். இவர் சென்னையில் இருந்து நான்கு மாதங்களுக்கு முன்புதான் நீலமங்கலம் பகுதியில் புது வீடு கட்டி மனைவி மற்றும் இரு மகன்களோடு குடி வந்துள்ளார்.இந்நிலையில் மூத்த மகனின் திருமணத்திற்காக உறவினர்களுக்கு பத்திரிக்கை வைப்பதற்கு கண்ணன் உள்ளிட்ட அனைவரும் வீட்டை பூட்டி கொண்டு சென்றுவிட்டனர். இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து உள்ளே இருந்த 8 சவரன் நகை மற்றும் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளான்.

வீடு திறந்திருப்பதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் சந்தேகம் அடைந்து கண்ணனுக்கு போன் செய்துள்ளார்.உறவினர்களுக்கு திருமண பத்திரிகையை அளித்து விட்டு இரவு வீட்டுக்கு வந்த கண்ணன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 சவரன் நகை மற்றும் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியுற்ற மணிமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து விரைந்து வந்த மணிமங்கலம் காவல்துறையினர் கண்ணனிடம் திருடு போனது பற்றி விசாரித்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கடந்த வாரம் இதே பகுதியில் சுமார் 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் திருடு போனது குறிப்பிடத்தக்கது

Views: - 231

0

0