வீட்டின் பின்பக்க கதவை உடைத்து புகுந்து 150 பவுன் மற்றும் 6 லட்ச ரொக்கம் திருட்டு
4 February 2021, 8:31 pmமதுரை: மதுரையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து புகுந்து 150 பவுன் மற்றும் 6 லட்ச ரொக்கம் திருட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,
மதுரை பைக்ரா EB காலனி பகுதியில் குடும்பத்துடன் முருகன் – காளிஸ்வரி தம்பதிகள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள், இதில் முருகன் என்பவர் வாடிப்பட்டி அருகே தனியார் டிராக்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்ற நிலையில், இன்று மதியம் முருகனின் மனைவி காளிஸ்வரி தனது பிள்ளைகளை பள்ளிக்குடத்திற்கு சென்று பிள்ளைகளை அழைத்து வர விட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டார், திரும்பி வந்து பார்த்த பொழுது விட்டின் பொருள்கள் அனைத்தும் கலைந்த நிலையில், இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்பு பிரோவின் வைத்திருந்த 150 பவுன் தங்க நகை 6 லட்சம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது,
உடனே சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மோப்பநாய் உதவியுடனும் கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்து கொள்ளையடித்த மர்ம நபர்களை போலிசார் வழக்கு பதிவு செய்து அக்கம் பக்கத்தில் உள்ள CCTV கேமராவை ஆய்வு செய்து தேடி வருகின்றனர். மதுரையில் பட்டப் பகலில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள், பணம் திருடு போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0
0