வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு: 20 பவுன் நகை கொள்ளை

12 July 2021, 3:33 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட புது சென்னாகுளம் பகுதி இந்தப் பகுதியில் ரமேஷ் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறைக்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் சொந்த ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில் குடும்பத்துடன் வசித்து வந்த இவர், வழக்கம்போல் இரவு தூங்க சென்றுள்ளார். நடுஇரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைப்பது போல் சத்தம் கேட்டு எழுந்து வந்த பார்த்த போது கொள்ளையன் திருடி கொண்டு இருப்பது தெரிய வந்தது. பின்னர் கொள்ளையனை துரத்தி சென்றுள்ளார். கொள்ளையன் பின்புற சுவர் ஏறி தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் வீட்டில் உள்ளே வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளை போனது தெரிய வந்துள்ளது. உடனடியாக வன்னியம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்தில் கைரேகை மற்றும் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் சோதனை ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வன்னியம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 136

0

0