பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தின் டிக்கியை உடைத்து ரொக்கம் திருட்டு

3 July 2021, 6:59 pm
Quick Share

அரியலூர்: பிரதான கடை வீதியில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத்தில் டிக்கியை உடைத்து 86 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடித்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் மேலக்குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவரது மகள் தீபா. இவர் குடும்ப செலவிற்காக ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு வங்கியில் நகையை இன்று அடமானம் வைத்துள்ளார். அதன் மூலம் கிடைக்க பெற்ற பணம் 86 ஆயிரத்தை ஸ்கூட்டி வாகனத்தின் டிக்கியில் வைத்து கொண்டு ஜவுளி கடைக்கு சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் டிக்கியை உடைக்க முயன்றார் முடியவில்லை. பிரதான கடைவீதி என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்ததால்,

மேலும் ஒரு மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் வந்து இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பணம் இருந்த இரு சக்கர வாகனத்தின் அருகே வந்து மறைத்துக் கொண்டு டிக்கியை உடைத்து அதில் இருந்த 86 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர். இது ஜவுளிக் கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 138

0

0