கனமழை காரணமாக சரிந்து விழுந்து சேதம் அடைந்த பாலம்: நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

18 November 2020, 8:10 pm
Quick Share

விருதுநகர்: விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் பகுதியில் கனமழை காரணமாக சரிந்து விழுந்து சேதம் அடைந்த பாலத்தை மாவட்ட ஆட்சியர் கண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கனமழை மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் விருதுநகர் அருகே உள்ள ஆர்.ஆர். நகரில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தில் கனமழை காரணமாக நேற்று பாலத்தில் பக்கவாட்டு சுவர் திடீரென சரிந்து விழுந்தது. அப்போது பாலத்தின் வழியே வாகனம் ஏதும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் பக்கவாட்டு சுவர் சரிந்து விழுந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் கண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த ஆட்சியர் கண்ணன் பேசுகையில், விருதுநகர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 பேரிடர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆர் ஆர் நகர் பகுதியில் இடிந்த பாலத்தை நாளை டெல்லியில் இருந்து நிபுணர்கள் குழு பார்வையிட்ட பின் பாலத்தை சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெறும் என தெரிவித்தார்.