உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்து 9 செம்மறி ஆடுகள் பலி

Author: Udayaraman
9 October 2020, 8:48 pm
Quick Share

செங்கல்பட்டு: செய்யூர் பகுதியில் மழையின் காரணமாக இடி தாக்கி உயர் மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்து 9 செம்மறி ஆடுகள் பரிதாபமாக இறந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குருபாதமேடு கிராமத்தில் பார்வதி என்பவர் வசித்து வருகின்றார். இன்று மதியம் கனத்த மழை பெய்ததால் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை ஓட்டிக்கொண்டு தனது வீட்டை நோக்கி பார்வதி வந்து கொண்டிருந்தார். மழையின் காரணமாக பலத்தை இடி இடித்தது. அதனால் அச்சமடைந்த பார்வதி ஆடுகளை அனுப்பிவிட்டு ஒரு வீட்டில் மழைக்காக ஒதுங்கினார்.

பலத்த இடி தாக்கியதால் பார்வதியின் வீட்டருகே செல்லும் உயர் மின்னழுத்த கம்பி அறுந்து கொட்டகை அருகே வந்த கொண்டிருந்த ஆடுகள் மீது விழுந்தது. உயர் மின்னழுத்த கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்து 9 செம்மறி ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது. மழையின் காரணமாக பார்வதி அருகே உள்ள வீட்டில் ஒதுங்கியதால் பார்வதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். செய்யூர் காவல்துறையினர் இறந்துபோன ஆடுகளை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 29

0

0