ஏரியில் குளிக்கச் சென்று அண்ணன், தங்கை நீரில் மூழ்கி உயிரிழப்பு
23 January 2021, 9:11 pmதிருவள்ளூர்: திருவள்ளூர் அருகே ஏரியில் குளிக்கச் சென்று அண்ணன் தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் இவர்களது மகன் தருண் மற்றும் தருணின் தங்கை தேவி இருவரும் அத்திப்பட்டி யில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். அருகில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரது உடலையும் கிராம மக்கள் மீட்டு மீஞ்சூர் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில்,
பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏரியில் குளிக்கச் சென்று அண்ணன் தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0
0