அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற தம்பி கைது

Author: Udhayakumar Raman
12 September 2021, 8:37 pm
Quick Share

கும்பகோணம்: வலங்கைமான் அருகே அண்ணனை கத்தியால் குத்தி கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார்.

வலங்கைமான் அருகே நல்லூர் மேலவீதியில் வசிப்பவர் வீராசாமி. இவரது மனைவி ரோஜாபதி. இவர்களுக்கு கார்த்தி, பிரசாத், வினோத் தன்னுடைய 3 மகன்கள் உள்ளனர். மூவரும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். இதில் கடைசி மகன் வினோத்துக்கு திருமணம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூத்தமகன் கார்த்தி (31) தனக்கு ஏன் திருமணம் செய்யவில்லை என தாயார் ரோஜாபதியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 11ம் தேதி இரவு அவர் தாயிடம் தகராறு செய்ததை தம்பி பிரசாத் (29) தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட வாய்த்தகராறில் ஆத்திரமடைந்த பிரசாத் கத்தியால் கார்த்தியை கத்தியால் குத்தியதில் எதிர்பாராதவிதமாக கார்த்தி உயிரிழந்தார். இதுகுறித்து வினோத் (27) கொடுத்த புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த வலங்கைமான் போலீசார் கார்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பிரசாத்தையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இச்சம்பவம் வலங்கைமான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 142

0

0