பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட சகோதரர்கள்: இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

Author: kavin kumar
28 September 2021, 5:53 pm
Quick Share

வேலூர்: காட்பாடி அருகே டி.கே.புரம் பாலாற்றில் அடித்து செல்லப்பட்ட சகோதரர்கள் 2 பேர் இரண்டு நாட்கள் தேடுதலுக்கு பின்னர் சடலமாக பேரிடர் மீட்புதுறையினர் மீட்டனர்.

வேலூர்மாவட்டம்,காட்பாடி விருதம்பட்டு காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி பாபு இவரது மகன்கள் முபாரக் இவரது தம்பி ஜாகீர் இருவரும் தண்டலம் கிருஷ்ணாபுரம் பாலாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது ஆற்றில் தம்பி ஜாகீய்ர் அடித்து செல்லப்பட்டார். அவர் காப்பாற்ற சென்ற அண்ணன் முபாரக்கும் இருவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். இவர்களை காட்பாடி மற்றும் வேலூர் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர் இதுகுறித்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து பார்த்து பிள்ளைகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதை கண்டு கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து வேலூர் வடக்கு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ளனர். நீரில் மூழ்கி மாயமான அண்ணன் தம்பி இருவரையும் தொடர்ந்து தீவிரமாக தீயணைப்புத்துறையினர் தேடி வந்தனர். நேற்று இரவு வரையில் தேடியும் தீயணைப்பு துறையினரால் இரண்டு பேரையும் மீட்க முடியாததால் இன்று அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் வந்து டி.கே புரம் பாலாற்றில் முபாரக் மற்றும் அவரின் தம்பி ஜாகீர் ஆகியோர் இருவரையும் பல மணிநேர தேடுதலுக்கு பின்னர் சடலமாக மீட்டர் இரண்டு பேரின் உடல்களையும் பார்த்து பெற்றோர்களும் உறவினர்களும் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் மீட்கப்பட்ட உடல்கள் பிரேதபரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Views: - 394

0

0