பி.எஸ்.என்.எல் ஊழியர்களை இழிவுபடுத்தி பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் கண்டித்து ஆர்ப்பாட்டம்…

12 August 2020, 10:13 pm
Quick Share

புதுச்சேரி: கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர் அனந்தகுமார் ஹெட்ஜ் பி.எஸ்.என்.எல் ஊழியர்களை இழிவுபடுத்தி பேசியதாக அவரை கண்டித்து புதுச்சேரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் ஹெட்ஜ் கடந்த இரு தினங்களுக்கு மூன் ஒரு நிகழ்ச்சியில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் வேலை செய்வதில்லை என்று பேசியுள்ளார் இதனை அடுத்து புதுச்சேரி பி.எஸ்.என்.எல் அதிகாரிகள், ஊழியர்கள் சங்கம் சார்பில் 50க்கும் மேற்ப்பட்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த குமார் பேச்சை கண்டித்து அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பி மத்திய அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்து பி.எஸ்.என்.எல் ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி புதுச்சேரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டதில் ஈடுப்பட்டனர். மேலும் அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

Views: - 8

0

0