திருச்சி சிறப்பு முகாமில் இருந்து வெளிநாட்டு கைதி தப்பியோட்டம்: போலீசார் தீவிர தேடுதல் வேட்டை!

Author: Udhayakumar Raman
1 September 2021, 7:51 pm
Quick Share

திருச்சி: திருச்சி சிறப்பு முகாமிலிருந்து திரைப்பட பாணியில் டேங்கர் லாரியில் தப்பிய பல்கேரிய கைதியை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சி, மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற அடிப்படையில் தாய்லாந்து, இந்தோனேஷியா, தென்கொரியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த 110கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு ஆன்லைன் மூலம் பணமோசடி செய்த வழக்கில் சென்னை பெருநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்யப்பட்ட பல்கேரியா நாட்டை சேர்ந்த லிலியன் ஆட்ரகௌவ்(55). அதிகாலை சிறைக்காவலர்கள் கணக்கெடுப்பின் போது தப்பியதே கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் லிலியன் ஆட்ரகௌவ்வை பார்த்தே 2 நாட்கள் ஆகிறது என்ற பகீர் தகவலை சக கைதிசுரேஷ் சிறைதுறை அதிகாரியிடம் தொிவித்து உள்ளனர்.

சிறைச்சாலையின் அறைக்கதவு கம்பியை அறுத்து, சுவற்றில் துளையிட்டு அவர் தப்பி சென்றுள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தினமும் சிறப்பு முகாமிற்கு தண்ணீர் வேன் வந்து செல்லும். தண்ணீர் இறக்கப்பட்ட பின் தண்ணீர் கேன் கொண்டு வந்த வேன் திரும்பி செல்லும் போது அதில் ஏறி தப்பித்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உளவுத்துறை உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சிறை வளாகத்தில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 95

0

0