வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புல்லட் திருட்டு

6 November 2020, 11:30 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புல்லட்டை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் சிசிடிவி காட்சி மூலம் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி அருகே உள்ள கிருமாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நெல்சன். இவர் அதேபகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வருகிறார் மேலும் கடைக்கு மேலே குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இதனிடையே நெல்சன் வழக்கம் போல இரவு வீட்டின் முன்பு தனது புல்லட்டை நிறுத்து விட்டு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 3 பேர் நள்ளிரவு வந்து புல்லட்டை திருடி சென்றனர்.

காலையில் எழுந்து பார்த்த போது புல்லட் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு புல்லட்டை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Views: - 15

0

0