அணைக்கட்டு பகுதியில் எருதுவிடும் விழா: 500-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்பு

14 January 2021, 1:55 pm
Quick Share

வேலூர்: அணைக்கட்டு பகுதியில் எருதுவிடும் விழாவில் 500-க்கும் மேற்பட்ட மாடுகள் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பேருந்துநிலையம் அருகில் இன்று எருதுவிடும் விழா நடைபெற்றது.சென்ற வருடம் கொரானா பிரச்சனையால் தடைசெய்யப்பட்ட எருதுவிடும் விழா இந்த வருடம் பல்வேறு கட்டுபாடுகளுடன் ஜனவரி 14-ம் தேதி முதல் பிப்ரவரி 26-ம் தேதி வரை வேலூர் மாவட்டத்தில் சுமார் 45 இடங்களில் அனுமதி அளிக்குப்பட்டது. அனுமதியில் முதற் இடமாக அணைக்கட்டு பகுதியில் அனுமதி அளிக்கப்பட்டதால் பார்வையாளர்கள் 5000-க்கும் மேற்ப்பட்டோர் அணை கட்டு பகுதியில் குவிந்தனர். 500-க்கும் மேற்ப்பட்ட காளைகள் பல்வேறு பகுதியில் இருந்து வந்தனர்.

போட்டியில் வெற்றி பெரும் காளைக்கு முதற்பரிசாக 1,05,555-ம் கடைசிபரிசாக 3, 201-ம் என55 பரிசுகள் வழங்கப்படுகிறது. காலை 10 மணிக்கு காளைகளை துன்புறுத்த மாட்டோம், பாதுகாப்பாக விழாவை நடத்துவோம் என்ற உறுதிமொழியோடு விழா தொடங்கி, வாடிவாசல் வழியாக காளைகள் சீறிபாய்ந்தது. இந்நிகழ்வினையொட்டி 100 -க்கும் மேற்ப்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சி அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் ஒளிபதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 6

0

0