வெளி மாவட்டத்திலிருந்து இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட நெல் மூட்டை: லாரியை பறிமுதல் செய்த வருவாய்துறையினர்

21 January 2021, 6:54 pm
Quick Share

ஈரோடு: கோபிசெட்டிபாளையத்தில் நெல் கொள்முதல் நிலையத்திற்கு வெளி மாவட்டத்திலிருந்து இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட நெல் மூட்டை லாரியை விவசாயிகள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுப்பட்டதையடுத்து, லாரியை வருவாய்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சுற்றுப்பகுதியில் செல்லும் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்கால்கள் மூலம் சுமார் 40 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனால் தமிழக அரசு வாணிபக்கழகத்தின் சார்பில் 22 இடங்களில் தற்காலிக நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டுவந்த நிலையில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில் இரண்டு நெல் கொள்முதல் நிலையங்களை மட்டுமே செயல்பட அனுமதித்து மற்றவற்றை மூடியுள்ளனர்.

இதனால் காலதாமதாக அறுவடை செய்யும் நெல்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை தஞ்சாவூர்,அரூர்,ஆரணி போன்ற பகுதிகளிலிருந்து கோபிசெட்டிபாளையத்தில் உள்ள நெல் வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல்களை வாங்கி வந்து கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல்படும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்துவருவதாகவும் அதனால் விவசாயிகளின் நெல்களை கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு கூகலூர் பகுதியில் நெல் மூட்டைகளுடன் சென்ற டாரஸ் லாரியை விவசாயிகள் மடிக்கி பிடித்தனர். அப்போது லாரியிலிருந்து இருவர் தப்பியோடிவிடவே லாரி ஓட்டுநர் மட்டும் இருந்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து குறைந்த விலைக்கு நெல்களை வாங்கிய வியாபாரிகள் கோபிசெட்டிபாளையம் பகுதியில் செயல்படும் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு எடுத்துவந்ததது தெரியவந்ததால் விவசாயிகள் நெல்மூட்டைகளுடன் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் நெல் கொள்முதல் செய்யப்பட்ட இடம் மற்றும் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட இடங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் போலி ஆவணங்கள் மூலம் நெல் கொண்டுவரப்பட்டது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் லாரியுடன் நெல்மூட்டைகளை பறிமுதல் செய்ய மாவட்ட ஆட்சியர் கதிரவன் உத்தரவு பிரத்ததையடுத்து நெல்மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்த வருவாய்துறையினர் வட்டாட்சியர் அலுவலகம் எடுத்துச்சென்றனர்.

தற்போது வரை வெளிமாவட்டங்களிலிருந்து 50 லோடுகளுக்கும் மேல் குறைந்த விலைக்கு நெல்களை வியாபாரிகள் வாங்கிவந்து கோபிசெட்டிபாளையம் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்துள்ளதாகவும், ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் முறைகேடுகள் நடைபெற்றுவருவாதாகவும் விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். மேலும் சட்டத்திற்கு புறம்பான நெல்களை கொள்முதல் செய்யும் அதிகாரிகள் மீதும் சான்றுகள் வழங்கும் அலுவலகர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இதனை தடுக்க கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்றும் விசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Views: - 0

0

0