ஸ்ரீ சொக்கநாதர் சுவாமி கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டு: மர்ம நபருக்கு போலீசார் வலை

18 July 2021, 1:57 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீ சொக்கநாதர் சுவாமி கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சந்நிதியில் இருந்த உண்டியலை இன்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் உடைத்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மேல ரத வீதியில் உள்ள இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான சொக்கநாத சுவாமி கோவிலில் இன்று அதிகாலை 25 மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கோயில் வளாகத்துக்கு உள்ளே சுவரேறி குதித்து வந்து உள்ளே தக்ஷிணாமூர்த்தி சன்னதியின் முன்பு இருந்த உண்டியலில் உண்டியல் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை திருடிக்கொண்டு சென்று விட்டார். மேலும் திருட வந்த நபர் கோவில் வளாகத்திற்குள் இருந்த சிசிடிவி கேமரா ஒன்று உடைக்கப்பட்டு சேதப் படுத்தி விட்டு சென்றுள்ளார்.

கோவில் வளாகத்தில் 16 சிசிடிவி கேமராக்கள் இருந்த நிலையில் பஜார் காவல் நிலைய போலீசார் சிசிடி கேமராவில் பதிவாகியிருந்த படக்காட்சிகளை கொண்டு உண்டியலை உடைத்து பணத்தை திருடிய இளைஞரை பஜார் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பஜார் காவல் நிலைய போலீசார் தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீஸ் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.

Views: - 111

0

0